ABOUT

நுட்ம் திட்டி பற்றி...

உலகில் தொழிநுட்பம் மற்றும் அறிவியல் துறைகள் மிகவும் வளர்ச்சி கண்டு அதன் உச்சக் கட்டத்தில் மனிதன் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலைத் தமிழ் பேசும் மக்களுக்காக எளிய தமிழில் வழங்கி வரும் பல நூறு பதிவர்கள் பதிவுலகில் சஞ்சரித்தாலும் அவ்வனைத்து வலைப்பூக்களுக்கும் விஜயம் செய்து அவற்றைப் பார்வையிடுவது என்பது இந்த அவசர உலகில் சற்று நடைமுறைச் சிக்கல்தான்...! 

எனவே, தமிழ் மொழியில் உள்ள தொழில்நுட்ப, அறிவியல் வலைப்பூக்களின் பதிவுகளை மாத்திரம் உடனுக்குடன் தானியங்கி முறையில் திரட்டும் வகையில் "நுட்ம் திட்டி" அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், "நுட்ம் திட்டி"-யின் இணைப்புச் சேவையாக இணையத்தில் பரவிக்கிடக்கும் தமிழ்ச் செயலிகள் மற்றும் குறுஞ்செயலிகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் தொகுத்துத் தரும் முயற்சியாக TAMIL APPS & WIDGETS என்ற பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியக் குறிப்புக்கள்:
  • "நுட்ம் திட்டி"- இல் இதுவரை இணைக்கப்படாத உங்களுடைய அல்லது உங்களுக்கு தெரிந்த தமிழ் மொழியில் உள்ள தொழில்நுட்ப, அறிவியல் வலைப்பூக்களை அருகிலுள்ள CONTACT FORM- இல் வலைப்பூ பற்றிய சிறு குறிப்புடன் அதன் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்பவும். வலைப்பூ பரிசீலிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள்  "நுட்ம் திட்டி"இல் இணைக்கப்படும். ஒரு முறை இணைக்கப்பட்ட பிறகு அத்தளத்தின் பதிவுகளை "நுட்ம் திட்டி" தானியங்கி முறையில் திரட்டும். 
  • "நுட்ம் திட்டி"- இன் இணைப்புச் சேவையான TAMIL APPS & WIDGETS என்ற பக்கத்தில் இதுவரை தொகுக்கப்படாத உங்களுடைய அல்லது உங்களுக்கு தெரிந்த தமிழ்ச் செயலிகள் மற்றும் குறுஞ்செயலிகளை அருகிலுள்ள CONTACT FORM மூலம் அவை பற்றிய விபரத்துடன் அவற்றின் URL- ஐயும் குறிப்பிட்டு அறியத் தரவும். அவை பரிசீலிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் அப்பக்கத்தில் இணைக்கப்படும்.
  • "நுட்ம் திட்டிபற்றிய மேலதிகத் தகவல்களுக்கும் விளம்பரங்களுக்கும் அருகிலுள்ள CONTACT FORM -ஐப் பயன்படுத்தலாம்.

உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களும், விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன...! 

 Post a Comment

4 comments:

  1. வரவேற்கத்தக்கது. நல்ல முயற்சி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...!!!

      Delete
  2. அருமையான முயற்சி.
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...!! தொடர்ந்தும் இணைந்திருங்கள்...!!!

      Delete